/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துாய்மை பணியாளர்களை திட்டியவர் மீது நடவடிக்கை அவசியம்: காவல் நிலையம் முன் முற்றுகை போராட்டம்
/
துாய்மை பணியாளர்களை திட்டியவர் மீது நடவடிக்கை அவசியம்: காவல் நிலையம் முன் முற்றுகை போராட்டம்
துாய்மை பணியாளர்களை திட்டியவர் மீது நடவடிக்கை அவசியம்: காவல் நிலையம் முன் முற்றுகை போராட்டம்
துாய்மை பணியாளர்களை திட்டியவர் மீது நடவடிக்கை அவசியம்: காவல் நிலையம் முன் முற்றுகை போராட்டம்
ADDED : செப் 18, 2024 08:53 PM

கோத்தகிரி : கோத்தகிரியில் பணியில் ஈடுபட்டிருந்த துாய்மை பணியாளர்களை, தகாத வார்த்தையில் திட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
கோத்தகிரி சிறப்பு நிலை பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, பேரூராட்சிக்கு உட்பட்ட, கோத்தகிரி பேரூராட்சி, 16வது வார்டுக்கு உட்பட்ட பெரியார் நகரில், பேரூராட்சி துாய்மை பணியாளர்கள், கலைவாணி மற்றும் பவித்ரா ஆகியோர், குப்பை சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது,'மட்கும் குப்பை, மட்காத குப்பைகளை தனித்தனியாக வழங்க வேண்டும்,' என, துாய்மை பணியாளர்கள் கூறியுள்ளள்ளனர்.இதனை பார்த்த ஒரு வீட்டின் உரிமையாளர், துாய்மை பணியாளர்களை ஜாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையில் திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பணியாளர்கள், பேரூராட்சி சுகாதார ஆய்வாளரிடம் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் ரஞ்சித் தலைமையில், கோத்தகிரி காவல் நிலையத்தில் புகார் அளித்த துாய்மை பணியாளர்கள், சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
துாய்மை பணியாளர்கள் கூறுகையில்,'சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாத பட்சத்தில், மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்க உள்ளோம். அதற்கும் உரிய தீர்வு கிடைக்கவில்லை எனில், நாங்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம்,' என்றனர்.
போலீசார் கூறுகையில்,'இந்த பிரச்னை தொடர்பாக, சையது முகமது என்பவரிடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், பணியாளர்கள் கலைந்து சென்றனர்,' என்றனர்.