/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பணிக்கு அமர்த்திய 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
/
பணிக்கு அமர்த்திய 33 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
ADDED : ஜன 28, 2024 11:36 PM
ஊட்டி:குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விடுமுறை நாட்களில் இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை வழங்காமல் பணியாளர்களை பணிக்கு அமர்த்திய நிறுவனங்களை கண்டறிந்து அந்நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டார்.
தொடர்ந்து குன்னூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சதீஸ்குமார் தலைமையில் தொழிலாளர் துறையினர் நீலகிரியில், குன்னூர், ஊட்டி, கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதிகளில் இயங்கும் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என, 60 நிறுவனங்களில் குடியரசு தினத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் பணியாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுமுறை முறையாக அளிக்காமல் பணிக்கு அமர்த்திய, 33 நிறுவனங்கள் கண்டறியப்பட்டு அந்த நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது.
தொழிலாளர்துறை மூலம் இதுபோன்று தொடர் நடவடிக்கைகள் அடிக்கடி நடத்தப்படும் என்றும், முரண்பாடுகள் காணப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தொழிலாளர் துறையினர் எச்சரித்து உள்ளனர்.