/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்த நீலகிரி எஸ்.பி., நடவடிக்கை
/
கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்த நீலகிரி எஸ்.பி., நடவடிக்கை
கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்த நீலகிரி எஸ்.பி., நடவடிக்கை
கஞ்சா புழக்கம் கட்டுப்படுத்த நீலகிரி எஸ்.பி., நடவடிக்கை
ADDED : அக் 02, 2024 11:57 PM
ஊட்டி : நீலகிரியில் கஞ்சா புழக்கத்தை கட்டுப்படுத்த, பழைய குற்றவாளிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று எஸ்.பி., ஆய்வு செய்தார்.
நீலகிரி எல்லையை ஒட்டி, தமிழகம், கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எல்லைகள் உள்ளது. கஞ்சா, போதை வஸ்துக்களில் புழக்கம் அதிகரித்து வருகிறது. ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு நீலகிரி வழியாக கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் கடத்தி செல்லப்படுகிறது. கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
எனினும், கஞ்சா விற்பனை தொடர்ந்து அதிகரிப்பால் போலீசாருக்கு பெரும் சவாலாக உள்ளது. சோதனை சாவடிகளிலும் இதற்காக கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மாவட்ட எஸ்.பி., நிஷா தலைமையிலான போலீசார், ஊட்டி பகுதியில் உள்ள பழைய கஞ்சா குற்றவாளிகளின் இருப்பிடங்களுக்கு நேரில் சென்று தற்போது என்ன வேலையில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறித்து விசாரணை நடத்தினார். அவர்கள் பிற பணிகளை செய்து, வாழ்வில் முன்னேற அறிவுரை வழங்கினர். இந்த ஆய்வின்போது, ஊட்டி டவுன் டி.எஸ்.பி., யசோதா, இன்ஸ்பெக்டர் முரளிதரன் உட்பட பலர் உடன் இருந்தனர்.

