/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பஜாரில் சுற்றிய தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை
/
பஜாரில் சுற்றிய தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை
பஜாரில் சுற்றிய தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை
பஜாரில் சுற்றிய தெருநாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை
ADDED : ஜூலை 27, 2025 09:31 PM

பந்தலுார்; பந்தலுார் பஜார் தெருநாய்கள் தொல்லை சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
பகல் நேரங்களில் சாலைகளில் உலா வரும் தெரு நாய்கள், திறந்த வெளியில் கொட்டப்படும் மீன் மற்றும் கோழி கழிவுகளை உட்கொள்கின்றன. சில நாய்கள் ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டு, பொதுமக்களை கடிக்க முற்படுகிறது.
இதனால், தெரு நாய்களை பிடித்துச் செல்ல வேண்டும் என நெல்லியாளம் நகராட்சி நிர்வாகம் சார்பில் விலங்கு மீட்பு குழுவினடரிடம் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து, மசினகுடியில் செயல்படும், விலங்குகள் மீட்பு மையத்தின் பணியாளர்கள் நேரில் வந்து தெருவில் சுற்றித்திரிந்த தெரு நாய்களை பிடித்து சென்றனர்.
'முதல் கட்டமாக, 15 நாய்கள் பிடித்து செல்லப்பட்ட நிலையில், தொடர்ச்சியாக தெருநாய்கள் பிடித்து செல்லப்படும்,' என, நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.