/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நிழற்குடைகளில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை
/
நிழற்குடைகளில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை
ADDED : டிச 03, 2024 05:56 AM

பந்தலுார்; 'நெல்லியாளம் நகராட்சியில், பயணிகள் நிழற்குடைகளில் போஸ்டர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, எச்சரிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் பயணிகள் பஸ்சுக்கு காத்திருப்பதற்கு, உள்ளாட்சி அமைப்புகள் சார்பில், கிராமங்களில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. அதில், பெரும்பாலான நிழற்குடைகளில் அரசியல் கட்சியினர், பொது நல அமைப்புகளை சேர்ந்தவர்கள், தங்கள் நிகழ்ச்சி குறித்த விளம்பர போஸ்டர்களை ஒட்டி வருவதால், நிழற்குடைகள் அலங்கோலமாக காட்சியளிக்கின்றன.
இந்நிலையில், பந்தலுார் பஜார் பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை நகராட்சி துாய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பயணிகள் நிழற்குடைகள் மற்றும் பொது இடங்களில் போஸ்டர்கள் ஒட்டினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றனர்.