/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் ; பந்தலுார் பொது மக்கள் வரவேற்பு
/
மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் ; பந்தலுார் பொது மக்கள் வரவேற்பு
மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் ; பந்தலுார் பொது மக்கள் வரவேற்பு
மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் ; பந்தலுார் பொது மக்கள் வரவேற்பு
ADDED : டிச 12, 2024 09:47 PM

பந்தலுார்; பந்தலுார் அரசு மருத்துவமனை குடியிருப்புகளை இடித்து, புதிய கட்டடம் கட்டும் பணி துவக்கப்பட்டு உள்ளது.
பந்தலுார் அரசு மருத்துவமனை தாலுகா தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கட்டடங்கள் இருந்த போதும், மருத்துவ பிரிவுகள் செயல்படுவதற்கான போதுமான கட்டடங்கள் மற்றும் தளவாட பொருட்கள் இல்லாமல், நோயாளிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடங்கள் கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மாநில அரசு, 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது. நிதி நெல்லியாளம் நகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தற்போது, அப்பகுதியில், ஊழியர்கள் குடியிருப்பு பகுதி கட்டடங்கள் முழுமையாக இடிக்கப்பட்டு, அங்கு மருத்துவமனைக்கு தேவையான கூடுதல் கட்டடங்களை கட்டும் கட்டுமான பணி துவக்கப்பட்டு உள்ளது.
இதற்காக பல குடியிருப்புகள் பொக்லைன் மூலம் இடித்து அப்புறப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதனால், ஊழியர்கள் தங்குவதற்கு குடியிருப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மக்கள் கூறுகையில், 'இந்த பகுதியில் கூடுதல் கட்டடம் கட்டப்பட்டு, இதனை ஒட்டி பழமையான நிலையில் உள்ள குடியிருப்புகளை அகற்ற வேண்டும். அங்கு, டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் தங்கும் வகையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தர வேண்டும். அவ்வாறு செய்தால், இங்கு கூடுதல் டாக்டர்கள் வந்து பணி செய்ய முடியும்,' என்றனர்.