/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பு; புகார் அளிக்க வட்ட வழங்கல் அலுவலர் அறிவுரை

ADDED : டிச 12, 2024 09:42 PM

பந்தலுார்; 'பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில், சமையல் காஸ் சிலிண்டர்கள் கூடுதல் கட்டணம் பெறுபவர்கள் குறித்து புகார் அளிக்கலாம்,' என, வட்ட வழங்கல் அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
பந்தலுார் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில், நடுவட்டம், கூடலுார் மற்றும் அய்யன்கொல்லி பகுதிகளில் உள்ள, காஸ் டீலர்கள் மூலம் சிலிண்டர்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதில், சிலிண்டர்களின் விலையுடன் போக்குவரத்து கட்டணமாக, 20 ரூபாய் கூடுதலாக பெறப்படுகிறது.
கூடலுார் பகுதியில் இருந்து சிலிண்டர்கள் வினியோகம் செய்யும் ஏஜென்ட், 'போக்குவரத்து கட்டணம், 20 ரூபாய்; கூடுதலாக, 15 ரூபாய் கட்டணம்,' என, ஒரு சிலிண்டருக்கு, 35 ரூபாய் கூடுதலாக வசூல் செய்வதாக நுகர்வோர் பலர் புகார் தெரிவித்துள்ளனர்.
நேற்று முன்தினம் சேரங்கோடு பகுதியில் நுகர்வோர் பலர் சம்பந்தப்பட்ட டீலருக்கு, தகவல் தெரிவித்த நிலையில், 'தெரியாமல் வாங்கி இருப்பார்; திரும்ப கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்,' என, தெரிவித்துள்ளார்.
மக்கள் கூறுகையில், 'ஒவ்வொரு மாதமும் இதே போல் கூடுதல் கட்டணம் வசூலிப்பதால் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர். எனவே, ஒவ்வொரு மாதமும் சிலிண்டருக்கு நுகர்வோர் எத்தனை ரூபாய் வழங்க வேண்டும் என்பதை, சிலிண்டர்கள் எடுத்து வரும் வாகனங்களில் பொதுமக்கள் பார்வையில் தெரியும்படி கட்டண விபரம் ஒட்டப்பட வேண்டும்; அப்போது தான் குழப்பம் தீரும்,' என்றனர்.
பந்தலுார் வட்ட வழங்கல் அலுவலர் பொன்னரசு கூறுகையில், ''பாதிக்கப்படும் நுகர்வோர் எழுத்து மூலமாக புகார் தெரிவித்தால், அது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.