/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டட பணி; மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு
/
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டட பணி; மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டட பணி; மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டட பணி; மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆய்வு
ADDED : ஏப் 06, 2025 09:37 PM

கோத்தகிரி; கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டடம் கட்ட அடிக்கல் நாட்ட பட்ட இடத்தை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
கோத்தகிரி அரசு மருத்துவமனையில், சமீபத்தில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அவசர சிகிச்சை பிரிவு துவக்கப்பட்டது. அதிநவீன உபகரணங்களுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனை வளாகத்தில், 'கூடுதல் கட்டடம் தேவை,' என, மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, 3.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டுவதற்கு, ஊட்டியில் நடந்த அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
அந்த பகுதியை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு கட்டட வரைபடத்தை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் சென்று பார்வையிட்ட அமைச்சர், நோயாளி களிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
அவர் கூறுகையில், 'கோத்தகிரி அரசு மருத்துவமனையில் கட்டடம் கட்டுவதற்கு, முதலமைச்சர் அடிக்கல் நாட்டிய நிலையில், தற்போது அந்த இடம் ஆய்வு செய்யப்பட்டது.
கட்டட பணியை, 6 மாதத்திற்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
கோத்தகிரி அரசு மருத்துவமனையில் நிரப்பப்படாத மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கு முக்கியத்துவம் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்,' என்றார்.
இந்த ஆய்வின் போது, சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜசேகர், மருத்துவமனை டீன் சிவக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.