/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாகற்காய்க்கு கூடுதல் விலை; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
/
பாகற்காய்க்கு கூடுதல் விலை; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
பாகற்காய்க்கு கூடுதல் விலை; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
பாகற்காய்க்கு கூடுதல் விலை; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
ADDED : ஏப் 07, 2025 09:10 PM

கூடலுார்; கூடலுார் பகுதியில், தற்போது பாகற்காய் சீசன் துவங்கி உள்ளது. இங்கு உற்பத்தி செய்யும் பாகற்காயை, வியாபாரிகள் நேரடியாக தோட்டங்களில் சென்று கொள்முதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், 'வியாபாரிகள் குறைந்த விலையில் பாகற்காய் கொள்முதல் செய்து, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். எனவே, கூடுதல் விலை வழங்க வேண்டும்,' என, விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இப்பிரச்னை தொடர்பான ஆலோசனைக் கூட்டம், கூடலுார் உழவர் சந்தை அலுவலகத்தில் நேற்று நடந்தது. வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை வேளாண்மை அலுவலர் கலைவாணி தலைமை வகித்தார்.
அதில், விவசாயிகள் தரப்பில், 'வியாபாரிகள் திட்டமிட்டு குறைந்த விலையில் பாகற்காய் கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகளுக்கு கூடுதல் விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
வியாபாரிகள், 'மார்க்கெட் விலை நிர்ணய அடிப்படையில் பாகற்காய் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. நாங்கள் விலையை குறைக்கவில்லை,' என்றனர். இது தொடர்பாக, சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில், 'பாகற்காய்க்கு கூடுதல் விலை வழங்க நடவடிக்கை எடுப்பக்கப்படும்,' என, வியாபாரிகள் தெரிவித்தனர். இதனால், தீர்வு ஏற்பட்டது. வேளாண் விற்பனைக்குழு கண்காணிப்பாளர் ரோகேஷ், உதவி வேளாண்மை அலுவலர் காயத்ரி உட்பட பலர் பங்கேற்றனர்.

