/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு கல்லுாரியில் இளங்கலை பாடப்பிரிவு சேர்க்கை
/
அரசு கல்லுாரியில் இளங்கலை பாடப்பிரிவு சேர்க்கை
ADDED : மே 11, 2025 11:39 PM
ஊட்டி; ஊட்டி அரசு கலை கல்லுாரியில் இளங்கலை படிப்புக்கான சேர்க்கைக்காக விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கல்லுாரி முதல்வர் ராமலட்சுமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஊட்டி அரசு கலை கல்லாரியில், 2025- 26ம் கல்வி ஆண்டில் இளங்கலை பாடப்பிரிவில் சேர்க்கைக்காக விண்ணப்பிப்போர், www.tngasa in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் விண்ணப்பிக்க உதவும் பொருட்டு, ஊட்டி அரசு கலை கல்லுாரி கலையரங்கில், மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது.
காலை, 10:30 மணி முதல், மாலை, 4:00 மணிவரை உதவி மையம் செயல்படும். மாணவ, மாணவியர் ஏதேனும் சந்தேகம் இருப்பின், உதவி மையத்தை அணுகி பயன் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.