/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்! 'நவோதயா' பள்ளியாக மாற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
/
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்! 'நவோதயா' பள்ளியாக மாற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்! 'நவோதயா' பள்ளியாக மாற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தம்! 'நவோதயா' பள்ளியாக மாற்ற மத்திய அரசுக்கு வலியுறுத்தல்
ADDED : ஜூலை 21, 2025 09:14 PM

குன்னுார்; 'அருவங்காடு வெடி மருந்து தொழிற்சாலை பள்ளியில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டு வருவதால், இதனை நவோதயா வித்யாலயாவாக மேம்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
குன்னுார் - -ஊட்டி சாலையில் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை, 1904ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இங்கு, 1929ம் ஆண்டு முதல் அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வந்த இந்தப்பள்ளி மாநில பாடப்பிரிவில் கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
தொழிற்சாலை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள பாதுகாப்பு உற்பத்தி துறையின் கீழ், 'முனிஷ் இந்திய பிரைவேட் லிமிடெட்' என மாற்றப்பட்ட பிறகு, கடந்த, 2022ல் 450 மாணவ, மாணவியர் இருந்த நிலையில், ஆண்டுதோறும், பள்ளியின் இறுதி வகுப்பு மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டு வருகிறது.
பள்ளி செயல்பாடுகளை நிறுத்தி வைப்பது; மாணவர்களை மாநில அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுவது தொடர்பாக கடந்த, 2024ல் கோல்கட்டாவில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில், 'மத்திய அரசின் கீழ் உள்ளதால், மாநில அரசுக்கு பள்ளியை எடுத்து நடத்த இயலாது,' என, தமிழக அரசு தெரிவித்துவிட்டது.
'தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை செயல்படுத்த, மாநில அரசு முட்டுக்கட்டையாக உள்ளது,' என, மத்திய இணை அமைச்சர் முருகன் உட்பட பா.ஜ.,வினர் தெரிவித்து வரும் நிலையில், இந்த பள்ளியை நவோதயா பள்ளியாக மாற்ற ஏற்கனவே வலியுறுத்தப்பட்டது. தொழிற் சங்கத்தினரும் மத்திய அரசே ஏற்று நடத்த மனுக்கள் அனுப்பியும் தீர்வு கிடைக்கவில்லை. இந்நிலையில், மாணவர்கள் சேர்க்கை நிறுத்தப்பட்டதால் நடப்பாண்டு முதல், 9 முதல் பிளஸ்-2 வரை, 68 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர்.
நவோதயா பள்ளியாக மாற்றுங்கள் இந்த பிரச்னை தொடர்பாக, பிரதமர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து, டி.எப்.எல்.யு., தொழிற்சங்க பொதுச் செயலாளர் வெங்கடேஸ்வர ராவ் கூறுகையில், ''இங்குள்ள தொழிற்சாலை பள்ளியில் சேர்க்கை மூடப்படுவது, ஏராளமான குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளில், தீங்கு விளைவிக்கும். அவர்களின் பெற்றோருக்கும் துயரத்தை ஏற்படுத்துகிறது.
கல்வி என்பது அடிப்படை உரிமை. அனைத்து பிராந்தியங்களிலும் வேலைவாய்ப்பு காரணமாக, தொழிற்சாலை குடும்பங்கள் வசிக்கும் தொழில்துறை நகரங்களில், பள்ளிப்படிப்புக்கான அணுகல் வலுப்படுத்தப்படுவது கட்டாயமாகும்.
இந்த அழுத்தமான பிரச்னையை கருத்தில் கொண்டு அருவங்காடு பள்ளியில், மாணவர் சேர்க்கையை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். சேர்க்கையை மீட்டெடுப்பது சாத்தியமில்லை எனில், ஜவஹர் நவோதயா வித்யாலயாவாக (ஜே.என்.வி.,) ஆக மேம்படுத்த பரிசீலிக்க வேண்டும், பள்ளியின் தற்போதைய உள்கட்டமைப்பு மற்றும் ஊழியர்கள் சமூகத்திற்கு திறம்பட சேவை செய்ய முடியும்,'' என்றார்.
'பாரதிய பிரதிரக்ஷா மஸ்துார் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் சிவக்குமார் கூறுகையில்,''வரலாற்று ரீதியாக அருவங்காடு, வெடி மருந்து தொழிற்சாலை ஊழியர்களின் குழந்தைகள் மற்றும், சுற்றியுள்ள கிராம மக்களின் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்குவதில் முக்கிய பங்கு வகித்துள்ளது.
இந்த பள்ளி மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டு வருவதால், தொழிற்சாலை வளாகத்தை சுற்றியுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலை நீடிக்கிறது. ஏற்கனவே கே.வி., பள்ளி உள்ள நிலையில், பேக்டரி மேல்நிலை பள்ளியை மீண்டும் செயல்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என் றார்.

