/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
/
அ.தி.மு.க., மனித சங்கிலி போராட்டம்
ADDED : மார் 12, 2024 11:26 PM

ஊட்டி:போதை பொருள் புழக்கத்தை தடுக்க தவறியதாக தி.மு.க., அரசை கண்டித்து, ஊட்டி காபி ஹவுஸ் சந்திப்பில் நடந்த மனித சங்கிலி போராட்டத்துக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் வினோத் தலைமை வகித்தார்.
மாவட்ட துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் தொண்டர்கள் கருப்பு நிற ஆடைகள் அணிந்து பங்கேற்றனர்.
முன்னாள் எம்.பி., அர்ஜூனன், முன்னாள் மாவட்ட செயலாளர் பால நந்தகுமார், முன்னாள் நகர செயலாளர் தேவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
* குன்னுார் மவுன்ட் ரோட்டில் நடந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு நகர செயலாளர் சரவணகுமார் தலைமை வகித்தார். மாவட்ட அவை தலைவர் மணி, சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சத்தார் உட்பட பலர் பங்கேற்றனர்.

