ADDED : பிப் 24, 2026 08:09 AM
பந்தலுார்: பந்தலுார் அருகே தேவாலா அரசு பழங்குடியினர் மேல்நிலைப் பள்ளியில், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, உயர் கல்வி வழிகாட்டி மற்றும் தேர்வு எழுதுவது குறித்து, வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் முனைவர் சமுத்திர பாண்டியன் வரவேற்றார். குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பிரபாகரன், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் படிப்பது முதல் தேர்வு எழுதுவது; உயர்கல்வி கற்க, அடுத்து சேர வேண்டிய வகுப்புகள் மற்றும் எந்தெந்த வேலைவாய்ப்பிற்கு, என்ன பிரிவில் சேர வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து, மாணவர்களுக்கு எழுத்து உபகரணங்கள் வழங்கப்பட்ன.
நிகழ்ச்சியில், கூடலுார் அரசு கலைக் கல்லுாரி உதவி பேராசிரியர் மகேஸ்வரன், சமூக பணியியல் துறை தலைவர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.
