/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி அவசியம்; ரேபிஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
/
செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி அவசியம்; ரேபிஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி அவசியம்; ரேபிஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி அவசியம்; ரேபிஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அறிவுரை
UPDATED : செப் 28, 2025 11:15 PM
ADDED : செப் 28, 2025 10:09 PM
குன்னுார், ; ''செல்ல பிராணிகளுக்கு ஆண்டுதோறும் ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம்,'' என, ரேபிஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.
குன்னுார் புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளி நாட்டு நலப்பணி திட்ட முகாம் இளித்தொரை கிராமத்தில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மாணவர்களுக்கான ரேபிஸ் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடந்தது.
அருவங்காடு உலகளாவிய கால்நடை மருத்துவ சேவை இந்தியா நிறுவன கல்வி அலுவலர் வரதராஜன் பேசியதாவது:
வீடுகளில் வளர்க்கும், செல்ல பிராணிகளுக்கு ஆண்டுதோறும் ரேபிஸ் தடுப்பூசி போடுவது அவசியம். இவற்றுக்கு கருத்தடை செய்வது நன்மை. இந்த நடவடிக்கையால் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும்.
வெறி பிடித்த நாய் அதிகமாக உமிழ்நீரை வடிக்கும். மரக்கட்டை, கண்ணில் பட்ட பொருட்களை எல்லாம் கடிக்கும். அங்குமிங்கும் ஓடும். மனிதர்களையும் கடிக்கும். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட நாய், 15 நாட்களுக்குள் இறந்து விடும். பாதிப்பு ஏற்பட்ட, 8 நாட்களுக்கு பின்னர் சோர்வுடன் நடக்க இயலாமல் காணப்படும். இத்தகைய அறிகுறிகளுடன் இருக்கும் நாய்களுக்கு அருகில் செல்லக் கூடாது. உலகளாவிய கால்நடை மருத்துவ சேவை நிறுவனத்திற்குத் தொடர்பு கொண்டு இது பற்றி தெரிவிக்கலாம். மாவட்டத்தின் கால்நடை பராமரிப்பு துறையின் வழிகாட்டுதலுடன், உலகளாவிய கால்நடை மருத்துவ சேவை இந்தியா நிறுவனம், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்வதால், நாய்களின் எண்ணிக்கை மாவட்டத்தில் கட்டுப்பாட்டுடன் உள்ளது. நீலகிரி மாவட்டம் ரேபிஸ் இல்லாத மாவட்டமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
நா ட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பேரணியாக சென்று ரேபிஸ் விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி இளித்தொரை கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.நாட்டு நலப்பணித் திட்ட உதவி அலுவலர் லாசர் மேத்யூஸ் நன்றி கூறி னார்.