/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ராணுவ 'அக்னிவீர் வாயு' தேர்வு; விண்ணப்பிக்க அறிவுரை
/
ராணுவ 'அக்னிவீர் வாயு' தேர்வு; விண்ணப்பிக்க அறிவுரை
ராணுவ 'அக்னிவீர் வாயு' தேர்வு; விண்ணப்பிக்க அறிவுரை
ராணுவ 'அக்னிவீர் வாயு' தேர்வு; விண்ணப்பிக்க அறிவுரை
ADDED : ஜன 24, 2024 11:51 PM
ஊட்டி : ராணுவ 'அக்னிவீர் வாயு' தேர்விற்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அருணா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
இந்தியா ராணுவத்தால் வெளியிடப்பட்டுள்ள 'அக்னிவீர் வாயு' தேர்விற்கு விண்ணப்பிக்க, மார்ச், 6ம் தேதி கடைசி நாள்.
இதற்கு, கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலத்துடன், பிளஸ்-2 தேர்ச்சி அல்லது இன்ஜினியரிங் டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு, 2004, ஜன., 2ம் தேதிக்கு பின்னரும், 2007, ஜூலை, 2ம் தேதிக்கு முன்னரும் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள்.
தகுதியுடைய ஆண்கள் மற்றும் பெண்கள் இத்தேர்விற்கு, https://agnipathvayu.cdac.in என்ற இணைய தளத்தின் மூலம், இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள் இணையதளத்தில் உள்ளது. மார்ச், 17ம் தேதி நடைபெற உள்ளது. உடற் தகுதி விபரங்கள் மற்றும் கூடுதல் விபரங்கள் தேவைப்படுவோர், இணைய தளத்தில் தெரிந்து கொள்ளலாம். நாட்டிற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் சேவை செய்ய விரும்பும் தகுதியுள்ள இளைஞர்கள், அதிக எண்ணிக்கையில் விண்ணப்பித்து பயனடையலாம்.
மேலும் விபரங்களுக்கு, 0423-2444004 மற்றும் 7200019666 தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.