/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
விளைபொருட்களை சந்தைப்படுத்த கூட்டத்தில் ஆலோசனை: குறைந்த வட்டியில் நிதி உதவி
/
விளைபொருட்களை சந்தைப்படுத்த கூட்டத்தில் ஆலோசனை: குறைந்த வட்டியில் நிதி உதவி
விளைபொருட்களை சந்தைப்படுத்த கூட்டத்தில் ஆலோசனை: குறைந்த வட்டியில் நிதி உதவி
விளைபொருட்களை சந்தைப்படுத்த கூட்டத்தில் ஆலோசனை: குறைந்த வட்டியில் நிதி உதவி
ADDED : ஜன 21, 2024 10:51 PM
ஊட்டி;ஊட்டியில், வேளா ண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், உழவர் உற்பத்தியாளர் நிறுவன செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு தலைமை வகித்து கலெக்டர் அருணா பேசியதாவது,
உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தயாரிப்புகள், நீலகிரி மற்றும் பிற மாவட்டங்களில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் விற்பனை செய்யப்படுகிறது.
ஆன்லைன் வர்த்தகம் வாயிலாக அனைத்து பகுதிகளிலும் தயாரிப்புகளை சந்தைப்படுத்துவது, சிறு தானியங்களில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரித்து, விற்பனை செய்வது குறித்து, ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளர் நிறுவனத்தின் செயல்பாடுகள், உறுப்பினர் விபரங்கள், அவர்களால் உற்பத்தி செய்யப்படும் விளைபொருட்கள், சந்தைப்படுத்தும் விதத்தை அறிந்து, காட்சிப்படுத்தப் பட்டிருந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் தயாரிப்புகள், பேக்கிங் மற்றும் பிரின்டிங் ஆகியவை மேம்படுத்த வேண்டும்.'' என்றார்.
தொடர்ந்து, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு, அரசால் வழங்கப்படும் நிதியுதவி, பயிற்சி குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தேயிலை, காபி, தேன், சிறுதானியங்கள் மற்றும் ஊறுகாய் வகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, முன்னோடி வங்கி மூலம் குறைந்த வட்டியில் நிதி உதவி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தோட்டக்கலை இணை இயக்குனர் சிபிலாமேரி, செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கிருஷ்ணமூர்த்தி, விற்பனை குழு செயலாளர் சாவித்திரி முன்னோடி வங்கி மேலாளர் சசிகுமார் சக்கரபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.