/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இயற்கை பாதுகாப்புக்கு 'பிளாஸ்டிக்' புழக்கத்தை தவிர்க்கணும் துணி பைகளை பயன்படுத்த அறிவுரை

ADDED : பிப் 22, 2024 11:31 PM

கோத்தகிரி:கோத்தகிரியில் மத்திய, மாநில அரசு சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் கடமலைக்குண்டு 'லா' தொண்டு நிறுவனம் ஆகியவை சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், புதுப்பிக்கதக்க ஆற்றல், திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, பிளாஸ்டிக் ஒழிப்பு, காலநிலை மாற்றம், பல்லுயிர் பெருக்கம், மண்வளம் மற்றும் இயற்கை வளம் பாதுகாப்பு ஆகியவை குறித்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
குறிப்பாக, ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி வீசப்படும் பேப்பர், பிளாஸ்டிக் டம்ளர்களின் புழக்கம், டீ கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்கள், விசேஷ வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படுகிறது. இதனால், சுற்றுச்சூழலுக்கும், வன உயிரினங்களுக்கும் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.
இதனை தவிர்க்க, சில்வர் டம்ளர், கண்ணாடி டம்ளர், பாக்கு மட்டை தட்டு, வாழை இலை மற்றும் துணி பைகளை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து, வாகன பிரசாரம் மற்றும் கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதேபோல், ஊட்டி புனித தெரசன்னை பள்ளியில், தேசிய பசுமைப்படை சார்பில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
'நெஸ்ட்' அறக்கட்டளை நிர்வாகி ராம்தாஸ், சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன், பள்ளி தலைமை ஆசிரியர் கமலக்கண்ணன், 'லா' தொண்டு நிறுவன செயலாளர் வெங்கடேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.