/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுரை
/
துப்பாக்கிகள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுரை
ADDED : மார் 20, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி;லோக்சபா தேர்தலை ஒட்டி, துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் காவல் நிலையத்தில் ஒப்படைக்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாகி, வரும், 19ல் தேர்தல் துவங்கி, நாடு முழுவதும், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல், நன்னடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ளது.
இதனால், நீலகிரி மாவட்டத்தில் படைக்கலன் வைத்திருக்கும் உரிமையாளர்கள், தங்களது துப்பாக்கிகளை, அருகில் உள்ள காவல் நிலையத்திலோ, அங்கீகாரம் பெற்ற படைக்கலன் பாதுகாப்பு கிடங்கிலோ உடனடியாக ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

