/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'மீண்டும் மஞ்சப்பை குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு' ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்தல்

ADDED : பிப் 16, 2025 11:12 PM
ஊட்டி,; 'மீண்டும் மஞ்சப்பை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என, ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுப்பது தொடர்பாக அனைத்து துறை அரசு அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில், நீலகிரி மாவட்டத்தில் ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் உட்பட, 19 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை உத்தரவு உள்ளது. எனினும், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முழுவதும் குறையவில்லை.
இந்நிலையில், 'நீலகிரி வரும் பஸ்களில் பயணிப்பவர்களிடம் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அந்த பஸ்சை பறிமுதல் செய்ய வேண்டும்; பஸ்சின் உரிமத்தை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும்; இவ்வாறு கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே நீலகிரியில் பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும்,' என, சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து அரசுத்துறை அலுவலர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் லட்சுமி பவ்யா தலைமை வகித்தார்.
அதில், பிளாஸ்டிக் ஒழிப்பை முழுமையாக செயல்படுத்துவது தொடர்பாகவும், தானியங்கி குடிநீர் வினியோக இயந்திரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.
மேலும், ' மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மின்சார இருசக்கர வாகனத்தின் வாயிலாக மீண்டும் மஞ்சப்பை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் கூடுதல் கலெக்டர் கவுசிக், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட பலர் பங்கேற்றனர்.