/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவு அவசியம்'; விழிப்புணர்வு முகாமில் அறிவுரை
/
'கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவு அவசியம்'; விழிப்புணர்வு முகாமில் அறிவுரை
'கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவு அவசியம்'; விழிப்புணர்வு முகாமில் அறிவுரை
'கர்ப்பிணி பெண்களுக்கு சத்தான உணவு அவசியம்'; விழிப்புணர்வு முகாமில் அறிவுரை
ADDED : பிப் 19, 2025 09:52 PM

கூடலுார் ; 'கூடலுார் அருகே, பழங்குடி கிராமத்தில் நடந்த உடல் ஆரோக்கியம் குறித்தவிழிப்புணர்வு முகாமில் பழங்குடி கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள் தினமும் சத்தான உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தப்பட்டது.
கூடலுார், ஏழுமுறம் பழங்குடி கிராமத்தில், நீலகிரி ஆதிவாசி நலச்சங்கம், குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், பழங்குடி கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் பெண்கள்,குழந்தைகள் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு முகாம் மற்றும் பாரம்பரியமான உணவு கண்காட்சி நடந்தது.
அதில், 'நாவா' திட்ட மேலாளர் அபிலாஷ்குமார் தலைமை வகித்து பேசுகையில், ''கர்ப்பிணி பெண்கள், பாலுாட்டும் தாய்மார்கள் சத்தான உணவுகளை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவைகளை பின்பற்றுவதன் மூலம், கர்ப்பிணி பெண்கள், தாய்மார்கள், குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்க உதவும்,'' என்றார்.
ஒருங்கிணைப்பாளர் விஜயா பேசுவையில், ''கர்ப்பிணி பெண்கள் டாக்டர்கள் ஆலோசனைகளை பின்பற்றுவதுடன், சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடலில் சத்து குறைவு ஏற்படும் போது, அது பிறக்கும் குழந்தைகளையும் பாதிக்கும். இதனை தவிர்க்க பாரம்பரிய சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது அவசியம். மேலும், நோய்கள் எப்பொழுதும் தடுக்க சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்து கொள்ள வேண்டும்,'' என்றார்.
காய்கறிகள், ஆற்றில்கிடைக்கக்கூடிய நண்டு, மீன்களை பயன்படுத்திதயாரிக்கப்பட்ட உணவுகளை பழங்குடியின பெண்கள் பார்வையிட்டனர். சத்தான உணவுகளை சமைப்பது மற்றும் அவைகளின் பயன்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.