ADDED : செப் 02, 2026 05:51 PM
அ நிறம் | அளவு
ஊட்டி: ஊட்டி நகரில் பஸ் ஸ்டாண்ட், ஏ.டி.சி., கமர்சியல் சாலை, ஸ்பென்ஷர் சாலை, தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், தாவரவியல் பூங்கா சாலைகளில் தினமும் ஏராளமான குதிரைகள், எருமைகள், மாடுகள் கூட்டமாக சுற்றி வருகின்றன.
இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் குதிரை தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். தற்போது, இரண்டாவது சீசன் துவங்க உள்ள நிலையில், சுற்றுலா பயணியர் வருகையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கால்நடைகளால் அசம்பாவிதம் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் நகரில் சுற்றித்திரியும் கால்நடைகளை கட்டுப்படுத்துவதுடன், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.
