/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இ -வாடகை திட்டத்தில் வேளாண் கருவிகள்; வேளாண்மை பொறியியல் துறை அழைப்பு
/
இ -வாடகை திட்டத்தில் வேளாண் கருவிகள்; வேளாண்மை பொறியியல் துறை அழைப்பு
இ -வாடகை திட்டத்தில் வேளாண் கருவிகள்; வேளாண்மை பொறியியல் துறை அழைப்பு
இ -வாடகை திட்டத்தில் வேளாண் கருவிகள்; வேளாண்மை பொறியியல் துறை அழைப்பு
ADDED : டிச 23, 2024 10:27 PM
ஊட்டி; 'இ--வாடகை திட்டத்தில் உழவர் செயலியின் மூலம் குறைந்த செலவில் வேளாண் கருவிகளை வாடகைக்கு பெற்று விவசாயிகள் பயன் பெறலாம்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலெக்டர் லட்சுமி பவ்யா அறிக்கை:
நீலகிரி மாவட்டத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் மண் தள்ளும் இயந்திரம் ஆகியவை ஒரு மணி நேரத்திற்கு, 1,230 ரூபாய் மற்றும் டிராக்டர் இணைப்புகளான சுழல் கலப்பை, 9 கொத்து கலப்பையுடன் ஒரு மணி நேரத்திற்கு, 500 ரூபாய் வாடகைக்கு விடப்படுகிறது.
மேலும்,'வேளாண் பொறியியல் துறையில் சக்கரவகை நெல் அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு, 1,160 ரூபாய்; டிராக்டர் வகை நெல் அறுவடை இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு 1,880 ரூபாய்; சக்கரவகை மண் அள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு, 890 ரூபாய்; டிராக்டர் வகை மண் அள்ளும் இயந்திரம் ஒரு மணி நேரத்திற்கு, 1,910 ரூபாய்;மினி டிராக்டர் ஒரு மணி நேரத்திற்கு, 460 ரூபாய்,' என, பல்வேறு வேளாண் கருவிகள் வாடகைக்கு விடப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற பட்டா நிலம் உள்ள விவசாயிகள் உழவர் செயலியில் உரிய விபரங்களை பதிவு செய்து வீட்டில் இருந்து கொண்டே விண்ணப்பித்து பயன் பெறலாம். விவரங்களுக்கு உதவி செயற்பொறியாளர்கள், ஊட்டி:0423-- 2960257; கூடலுார்: 04262-296599 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் உள்ள வேளாண்மை பொறியியல் துறை உதவி பொறியாளர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.