தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/வேளாண்மை கருத்தரங்கு

வேளாண்மை கருத்தரங்கு

வேளாண்மை கருத்தரங்கு


ADDED : பிப் 20, 2024 11:10 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2024 11:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்:குன்னுார் உபாசி அரங்கில் நாளை (22ம் தேதி) நடக்கும் அங்கக வேளாண்மை கருத்தரங்கில் பங்கேற்க விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

குன்னுார் தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் விஜயலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: தோட்டக்கலை மற்றும் மலை பயிர் துறை சார்பில் மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் உபாசி அரங்கில், 22ம் தேதி காலை, 10:00 மணிக்கு அங்கக வேளாண்மை கருத்தரங்கு நடக்கிறது.

கருத்தரங்கில் அங்கக வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.

மேலும், முன்னோடி அங்கக வேளாண்மை சாகுபடியாளர்களின் அனுபவம் குறித்து செயல் விளக்கம் அளிக்கப்படுகிறது. மேலும், அங்கக காட்சி பொருட்கள் கண்காட்சி நடக்கிறது.

இதில், விவசாயிகள் பங்கேற்று பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us