/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
'ஏஐ' மனித குலத்தின் நன்மைக்கு பயன்பட வேண்டும் அறிவியல் கருத்தரங்கில் கருத்து
/
'ஏஐ' மனித குலத்தின் நன்மைக்கு பயன்பட வேண்டும் அறிவியல் கருத்தரங்கில் கருத்து
'ஏஐ' மனித குலத்தின் நன்மைக்கு பயன்பட வேண்டும் அறிவியல் கருத்தரங்கில் கருத்து
'ஏஐ' மனித குலத்தின் நன்மைக்கு பயன்பட வேண்டும் அறிவியல் கருத்தரங்கில் கருத்து
ADDED : ஜன 22, 2025 11:11 PM

கூடலுார், ; கூடலுார் அருகே உள்ள மசினகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில், அறிவியல் கருத்தரங்கு நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் சசிகுமார் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர்ஆசிரியர் ராஜூ, சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசியதாவது:
கடந்த, 300 ஆண்டுகளில் அறிவியல் வளர்ச்சி உலகத்தை புரட்டி போட்டுள்ளது. மனித இனம், ஒரு குறுகிய காலத்தில் படைக்கப்பட்டது என மக்கள் நம்பிய காலத்தில், 'டார்வின்' தனது கொள்கையின் மூலம், 'மனித குலம் குரங்கு குடும்பத்தில் ஒரு கிளையாக தோன்றியது,' என, கண்டறிந்தார்.
அந்த நாள் முதல் இன்றைய மரபணு கண்டுபிடிப்புகள், புதிய உயிரினங்களை ஆய்வகத்திலேயே உருவாக்கலாம் என்பது வரை வளர்ந்துள்ளது. இன்றைய காலநிலை மாற்றத்தை அறிவியல் துல்லியமாக கண்டறிந்துள்ளது. அதன் தாக்கத்தை குறைக்கும் வகையில், அதிக அளவு கார்பனை உட்கொள்ளும் அதிக பரப்பளவு உள்ள இலைகளை கொண்ட தாவரங்களை மரபணு மாற்றம் தொழில்நுட்ப மூலம் கண்டறிந்துள்ளது.
மருத்துவ துறையில் ஒவ்வொரு தனி மனிதனும் சிறப்பான தன்மை கொண்டவர் என்ற வகையில், அவரது மறுபணுவை கொண்டு, தனிப்பட்ட மருந்துகளை உற்பத்தி செய்து கொடுக்கும் அறிவியல் இன்று வேகமாக வளர்ந்து வருகிறது.
நவீன தொழில்நுட்பமான, 'ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் ' எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மனித மூளையில் உள்ள பத்தாயிரம் கோடி நியூரான்களின் செயல்பாடுகளை ஆதாரமாக கொண்டுள்ளது. 'ஏஐ என்பது, அணுகுண்டு கண்டுபிடிப்புக்கு இணையானது,' என, கூறப்படுகிறது. இது, மனிதகுலத்தின் நன்மைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால், தற்போது ராணுவத்திற்கு பெருமளவு பயன்படுத்துவது வருத்தம் அளிப்பதாக கூறப்பட்டுள்ளது.
மாணவர்கள் வளர்ந்து வரும் அறிவியல் துறைகள் குறித்து நன்கு தெரிந்து கொண்டு, என்ன படிக்கலாம், எந்த துறையை தேர்ந்தெடுக்கலாம் என புரிந்து கொண்டு தங்கள் வாழ்க்கையை வளப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
இதில், மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். பள்ளி முதுகலை ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். ஆசிரியர் நாகராஜன் நன்றி கூறினார்.