அ.தி.மு.க., --தி.மு.க., வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் தனிதனியே வழிபாடு
அ.தி.மு.க., --தி.மு.க., வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் தனிதனியே வழிபாடு
ADDED : ஏப் 14, 2026 10:40 PM
அ நிறம் | அளவு
குன்னுார்: குன்னுார் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேர் வடம் பிடித்த போது, அ.தி.மு.க.,- தி.மு.க., வேட்பாளர்கள் சுவாமி தரிசனம் செய்து பக்தர்களிடம் ஓட்டு சேகரித்தனர்.
குனனுார் ் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா தேர்வடம் பிடிக்கும் முன்பாக, முதலில் அ.தி.மு.க., வேட்பாளர் சாந்தி ராமு கட்சியினருடன் வந்தார். தொடர்ந்து தி.மு.க., வேட்பாளர் ராஜு கட்சியினருடன் வந்தார். இருவருக்கும் தனிதனியே பரிவட்டம் சார்த்தப்பட்டது. தேர் வடம் பிடித்த போது பக்தர்கள் கூட்டத்துடன் சேர்ந்து அம்மனை வழிபட்டு சுவாமி தரிசனம் செய்து வடம் பிடித்தனர். பக்தர்களிடம் ஓட்டு சேகரித்தனர்.
