தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு: அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

 விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு: அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி

 விவசாய பயிர்களுக்கு உரிய இழப்பீடு: அ.தி.மு.க., வேட்பாளர் உறுதி


ADDED : ஏப் 19, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 19, 2026 06:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலூர்: கூடலூர், மண்வயல் பகுதியில் நேற்று, நடந்த தேர்தல் பிரசாரத்தில் அ.தி.மு.க., வேட்பாளர் பொன் ஜெயசீலன் பேசியதாவது,

'நான் கடந்த,5 ஆண்டுகளாக எல்லாருக்குமான எம்.எல்.ஏ., வாக பணியாற்றினேன். பழங்குடி மக்களை 5 பேரை, சட்டமன்றத்துக்கு அழைத்துச் சென்று, அவர்கள் வருமை குறித்தும், பல குடும்பங்கள் ஒரே வீட்டில் பலர் வசிப்பது குறித்தும், அவர்களுக்கு தனித்தனி வீடுகள் வேண்டும் என்பது குறித்தும் பேசியுள்ளேன்.

தி.மு.க., சிறுபான்மையினருக்கு காவலர் என, கூறி வருகிறது. ஆனால் அவர்களுக்காக இதுவரை ஏதும் செய்யவில்லை. அ.தி.மு.க., பா.ஜ., பாகுபாடு இன்றி அவர்களுக்கும் பாதுகாப்பாக இருப்பதுடன், பிரச்னைகள் தீர்ப்பதற்கு உறுதுணையாக உள்ளது.ஸ்ரீமதுரை பகுதியில், சிறுபான்மை வழிபாடு தளம் அமைந்துள்ள இடம் தங்களுக்கு சொந்தமான இடம் என, வனத்துறையினர் கூறினர். இதனை நாங்கள் தடுத்துள்ளோம்.

கூடலூர் பகுதி விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. காட்டு யானைகள் இவைகளை சேதப்படுத்தி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. அரசு வழங்கும் சொற்ப இழப்பீடு போதுமானதாக இல்லை. விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கூறி சட்டமன்றத்தில் பேசுவையும் பலன் இல்லை. பயிர்களை பாதுகாக்க மக்கள் சோலார் மின்வேலி அமைத்த போது, வனத்துறையினர் அதனை தடுத்தனர். சிலர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. இதற்கு தலைமை சரியாக இல்லாததை காரணம்.

அடுத்து அமைய உள்ள அ.தி.மு.க., ஆட்சியில், எடப்பாடியார் முதல்வராக பொறுப்பேற்றவுடன், போதைப் பொருள்கள் கட்டுப்படுத்தப்படும். சட்டம் ஒழுங்கு இரும்பு கரம் கொண்டு பாதுகாக்கப்படும். கூடலூரில் தொடரும் செக்ஷன் 17 நிலப் பிரச்னைக்கு, தனியார் வன பாதுகாப்பு சட்டம், வீடுகளுக்கு மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும். எனவே இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை எம்.எல்.ஏ.,வாக மீண்டும் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு, பொன் ஜெயசீலன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us