தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ இரவு நேர போக்குவரத்து தடைக்கு தீர்வு :கூடலுார் அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி

 இரவு நேர போக்குவரத்து தடைக்கு தீர்வு :கூடலுார் அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி

 இரவு நேர போக்குவரத்து தடைக்கு தீர்வு :கூடலுார் அ.தி.மு.க., வேட்பாளர் வாக்குறுதி


ADDED : ஏப் 21, 2026 07:09 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 21, 2026 07:09 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கூடலுார்: கூடலுார் சட்டசபை தொகுதி அ.தி.மு.க., வேட்பாளராக மீண்டும் போட்டியிடும் பொன் ஜெயசீலன் நேற்று நெல்லியாளம் பகுதிக்கு உட்பட்ட, மரப்பாலம், நாடுகாணி, தேவாலா, பந்தலுார் உள்ளிட்ட பகுதிகளில், இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது, அவர் பேசியதாவது:

கூடலுார் பகுதியில் கட்சிகள் பார்க்காமல் மக்களுக்காக பணியாற்றியுள்ளேன். இப்பகுதியில், தொடரும் செக்சன்-17 நிலப் பிரச்னை; தனியார் வன பாதுகாப்பு சட்டம்; அனைத்து வீடுகளுக்கும் மின் கிடைக்க நடவடிக்கை எடுப்பேன். அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்களில் பணியாற்றி ஓய்வு பெறும் தொழிலாளர் குடும்பங்களுக்கு தரமான சொந்த வீடுகள் கட்டித் தரவும், சுற்றுலா தங்களை கொண்டு வந்து, வேலை வாய்ப்புகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுப்பேன். மேலும், அரசு தேயிலை தோட்ட நிறுவனமான டான்டீயில், நீண்ட காலமாக பணிபுரியும் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு தலா இரண்டு ஏக்கர் நிலம் நீண்ட கால குத்தகைக்கு வழங்க நடவடிக்கை எடுப்பேன்.

வனவிலங்குகள் பாதுகாப்பை காரணம் கூறி, முதுமலை, பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக செல்லும் மைசூரு சாலையில் இரவு, 9:00 மணி முதல் காலை, 6:00 மணி வரை வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், நீலகிரி, கேரளா, கர்நாடகா பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

எனவே, வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படத்த வகையில், உயர்மட்ட மேம்பாலம் சாலை அமைத்து, இரவு நேர போக்குவரத்து தடைக்கு தீர்வு காண மத்திய மாநில, அரசுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பேன்.

கடந்த, 5 ஆண்டுகள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,வாக கூடலுார் பகுதி பிரச்னைகள் குறித்து, சட்டசபையில் பேசிய நான், அடுத்த அ.தி.மு.க., ஆட்சியில், ஆளும் கட்சி எம்.எல்.ஏ., வாக இப்பகுதி மக்கள் பிரச்னைகளை பேசி நிரந்தர தீர்வு காண்பேன். எனவே, தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைத்திட, அனைவரும் எனக்கு, இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us