/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காட்டெருமை வேட்டை வழக்கு அ.தி.மு.க., நிர்வாகி சரண்
/
காட்டெருமை வேட்டை வழக்கு அ.தி.மு.க., நிர்வாகி சரண்
காட்டெருமை வேட்டை வழக்கு அ.தி.மு.க., நிர்வாகி சரண்
காட்டெருமை வேட்டை வழக்கு அ.தி.மு.க., நிர்வாகி சரண்
ADDED : நவ 26, 2024 12:55 AM

கூடலுார் : நீலகிரி மாவட்டம், கூடலுார் சில்வர் கிளவுட் அருகே உள்ள தனியார் எஸ்டேட் பகுதியில், ஏப்., மாதம் காட்டெருமை வேட்டையாடப்பட்டது.
இது தொடர்பாக, எஸ்டேட் பணியாளர்கள் மூவரை, நடுவட்டம் வனத்துறையினர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து இரு நாட்டு துப்பாக்கிகள், 11 தோட்டாக்கள், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சம்பவம் நடந்த இடம், அ.தி.மு.க., மாநில வர்த்தக அணி தலைவர் சஜீவன் என்பவருக்கு சொந்தமானது என்பதும், இவர்கள் பயன்படுத்திய துப்பாக்கியை, கூடலுாரை சேர்ந்த சுபைர் என்பவர், ஸ்ரீகுமார் என்பவரிடம் வாங்கி, கொடுத்தார் என்பதும் தெரியவந்தது.
காட்டெருமை வேட்டை தொடர்பான வழக்கில், இடத்தின் உரிமையாளர் சஜீவன் மற்றும் சுபைர், ஸ்ரீகுமார் ஆகியோரை, வனத்துறையினர் குற்றவாளிகளாக சேர்த்தனர். மேலும், கள்ள துப்பாக்கி வைத்திருந்தது தொடர்பாக, இவர்கள் மீது கூடலுார் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த இவர்களை, போலீசார் தேடி வந்தனர். அதில், சுபைர், ஸ்ரீகுமார் ஆகியோர் ஏற்கனவே ஜாமின் பெற்றுள்ளனர். சஜீவன் வெளிநாட்டில் இருந்தார். இவருக்கு, சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் ஜாமின் கிடைத்தது.
ஐகோர்ட் உத்தரவுபடி, 'வாரத்தில் இரண்டு நாட்கள், கூடலுார் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் வனத்துறை அலுவலகத்தில், நான்கு மாதங்களுக்கு கையெழுத்து இட வேண்டும்' என்ற நிபந்தனையுடன் ஜாமின் வழங்கப்பட்டது.
அதன்படி, கூடலுார் மாஜிஸ்திரேட் சசின்குமார் முன்னிலையில், நேற்று சஜீவன் சரண் அடைந்தார்.

