/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க., நிவாரண உதவி
/
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அ.தி.மு.க., நிவாரண உதவி
ADDED : ஜூன் 01, 2025 10:10 PM
ஊட்டி:
மழையால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாமில் தங்கியுள்ளவர்களுக்கு அ.தி.மு.க., சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஆங்காங்கே மரங்கள் விழுந்து பாதிக்கப்பட்டது. இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் அறிவிப்பால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட தலையாட்டு மந்து பகுதியில் உள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த பொதுமக்களுக்கு அ.தி.மு.க., சார்பில் மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில், அத்தியாவசிய பொருட்கள், கம்பளி, வேட்டி, சேலை நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
மாநில இளைஞர் அணி செயலாளர் பாலநந்தகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.