/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பாய்ஸ் கம்பெனியில் ஏழைகளுக்கு நல உதவி
/
பாய்ஸ் கம்பெனியில் ஏழைகளுக்கு நல உதவி
ADDED : டிச 17, 2024 09:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குன்னுார்; குன்னுார் பாய்ஸ் கம்பெனி ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் நல உதவி வழங்கப்பட்டது.
குன்னுார் அருகே பாய்ஸ்கம்பெனி துாய ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில், நடந்த கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ஏழை மக்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டன. பாதிரியார் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார்.
மத்திய சபை தலைவர் நிக்கோலஸ், வட்டார சபை தலைவர் டோமினிக், மூத்த உறுப்பினர் ஆபிரகாம் முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை தலைவர் மெல்க்யூர், செயலாளர் நான்சி, பொருளாளர் மாசிலாமணி மற்றும் சபை உறுப்பினர்கள் செய்திருந்தனர்.