/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை: வனத்துறையினர் தீவிர சிகிச்சை
/
உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை: வனத்துறையினர் தீவிர சிகிச்சை
உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை: வனத்துறையினர் தீவிர சிகிச்சை
உடல் நலம் பாதிக்கப்பட்ட காட்டு யானை: வனத்துறையினர் தீவிர சிகிச்சை
ADDED : ஏப் 05, 2024 11:30 AM

கூடலூர்: நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி வனக்கோட்டம், சிங்கார வனச் சரகத்துக்கு உட்பட்ட தனியார் இடத்தில், இன்று (ஏப்.,5) காலை 8 வயதுடைய காட்டு யானை உடல்நலம் பாதிக்கப்பட்டு படுத்து கிடந்தது. தகவல் அறிந்த மசினகுடி கோட்ட துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் ஜான் பீட்டர், வனவர் சங்கர் அங்கு சென்று அதன் உடலை ஆய்வு செய்தனர்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட யானை, எழுந்து நடக்க முடியாமல் போராடிக் கொண்டிருந்தது. தொடர்ந்து முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர், யானையின் உடல் நிலையை பரிசோதனை செய்து, தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.