/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மினி பஸ்களில் 'ஏர் ஹாரன்'; ஒலி மாசு அதிகரிப்பு
/
மினி பஸ்களில் 'ஏர் ஹாரன்'; ஒலி மாசு அதிகரிப்பு
ADDED : செப் 24, 2024 11:31 PM
குன்னூர் : குன்னுார் மினி பஸ்களில் 'ஏர் ஹாரன்' அதிகளவில் பயன்படுத்துவதை போலீசார் கண்டு கொள்ளாமல் உள்ளனர்.
குன்னுார் வண்டிச்சோலை, பெள்ளட்டி மட்டம், ஓட்டுப்பட்டறை, வசம்பள்ளம், உபதலை, ஜெகதளா உட்பட பல பகுதிகளுக்கும் மினி பஸ்கள் இயக்கப்படுகிறது. பெரும்பாலான பஸ்களில் ஏர் ஹாரன் பயன்படுத்துவதால் ஒலி மாசு ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக வயதான முதியவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கூடுதல் பயணிகளை ஏற்றி செல்வதுடன், பாடல்களும் அதிக சப்தத்தில் வைக்கப்படுகிறது. சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'பல இடங்களிலும் இரு சக்கர வாகனங்களை நிறுத்தி அபராதம் விதிக்கும் போலீசார், மினி பஸ்களை கண்டு கொள்வதில்லை. அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களின் குறிப்பிட்ட சில மினிபஸ்கள், அதிவேகத்தில் செல்லும் போதும் நடவடிக்கை எடுப்பதில்லை. ஓட்டுப்பட்டறை - ஜெகதளா வழித்தடத்தில் இயக்கும் சில மினி பஸ் டிரைவர்கள் அடிக்கடி மற்ற வாகன டிரைவர்களிடம் தகராறில் ஈடுபடுவதை தடுத்து தீர்வு காணப்படவில்லை எனவே வட்டார போக்குவரத்து அலுவலர் இதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.