/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குன்னுாரில் இயங்கும் மினி பஸ்களில் ஏர் ஹாரன், ஆடியோ சிஸ்டம் பறிமுதல் மீண்டும் பயன்படுத்தினால் 'லைசன்ஸ்' ரத்து

ADDED : டிச 13, 2024 09:12 PM

குன்னுார்; குன்னுார் மினி பஸ்களில் பயன்படுத்திய, 'ஏர் ஹாரன்கள்; ஆடியோ சிஸ்டம்' பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
குன்னுார் பகுதிகளில் இயங்கும் மினி பஸ்களில் ஏர்ஹாரன்கள் பயன்படுத்துவதும், அதிக சப்தத்தில் பாடல்கள் ஒலிபரப்பி வருவதும் அதிகரித்திருந்தது.
இது தொடர்பான புகாரின் பேரில், ஊட்டி வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் தலைமையில், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் அருண்குமார் மற்றும் ஊழியர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதில், 6 மினி பஸ்களில், ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 4 மினி பஸ்களில் அதிக சப்தம் எழுப்பக்கூடிய ஆடியோ சிஸ்டம் பறிமுதல் செய்யப்பட்டது. தலா, 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன் கூறுகையில், ''இது போன்று விதிமீறி, மீண்டும் ஏர் ஹாரன்கள், ஆடியோ சிஸ்டம் பயன்படுத்தினாலும், அதிக வேகத்தில் ஓட்டினாலும் மினி பஸ்சின் லைசன்ஸ் ரத்து செய்து, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.