/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மாநில கராத்தே போட்டி ஆலன் திலக் மாணவர்கள் சாதனை
/
மாநில கராத்தே போட்டி ஆலன் திலக் மாணவர்கள் சாதனை
ADDED : பிப் 14, 2026 04:44 AM

குன்னுார்: மாநில அளவில் சாதனை புரிந்த நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆலன் திலக் கராத்தே மாணவ, மாணவிகளுக்கு குன்னுாரில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சென்னையில் நடந்த மாநில அளவிலான ஆலன் திலக் கராத்தே போட்டியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதில், நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த 12 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில், ஜனார்த் (கட்டாக், குமுத்தே), தர்ஷித் சுதீப், நிலாக்ஷா, ஷான்வி, ஜெய் தர்ஷினி (குமுத்தே) ஆகியோர் தங்கம் வென்றனர். தேஜஸ், (கட்டா) வெள்ளியையும், ஜோஸ்மிதா, விஷ்ணு, ஜோஷிதா, நட்சத்திரா, ஹேமந்த் (கட்டா) ஆகியோர் வெண்கலம் வென்றனர். வெற்றி பெற்று மாநில அளவில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்கு, மூத்த பயிற்சியாளர் ராமகிருஷ்ணன் கவுரவித்து பேசினார்.
நீலகிரி மாவட்ட கராத்தே சங்க செயலாளர் ஜோசப் பாக்கிய செல்வம், துணைத்தலைவர் ஜான், பயிற்சியாளர்கள் நித்யா, ஹரிபிரியா மற்றும் வெஸ்லி ஆலய செயலாளர் பிரபாகர், பொருளாளர் சாலமன் ராஜ்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

