sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 கோத்தகிரியில் அம்ருத் குடிநீர் திட்டபணி நிறைவு பெறாததால் பாதிப்பு

/

 கோத்தகிரியில் அம்ருத் குடிநீர் திட்டபணி நிறைவு பெறாததால் பாதிப்பு

 கோத்தகிரியில் அம்ருத் குடிநீர் திட்டபணி நிறைவு பெறாததால் பாதிப்பு

 கோத்தகிரியில் அம்ருத் குடிநீர் திட்டபணி நிறைவு பெறாததால் பாதிப்பு


ADDED : ஜன 30, 2026 06:42 AM

Google News

ADDED : ஜன 30, 2026 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில், அம்ரூத் குடிநீர் திட்ட பணி நிறைவு பெறாததால் பாதிப்பு அதிகரித்துள்ளது.

கோத்தகிரி நகராட்சிக்கு உட்பட்ட, 21 வார்டுகளுக்கு, ஈளாடா தடுப்பணியில் இருந்து, தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. நகரில் பெருகியுள்ள குடியிருப்புகள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் காட்டேஜ்கள் காரணமாக. தற்போது கிடைத்து வரும் தண்ணீர், போதுமானதாக இல்லை.

இதனால், வறட்சி நாட்களில் தண்ணீர் தட்டுப்பாடு பிரச்னை, தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. இதனை தவிர்க்கவும், அனைத்து குடியிருப்புகளுக்கும் தண்ணீர் வினியோகிக்க ஏதுவாக, மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தில், 43 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணி நிறைவடையும் பட்சத்தில், நகர மக்களின் தண்ணீர் தேவை, முழுமையாக பூர்த்தி அடையும் என நம்பப்படுகிறது. அதற்காக, கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக, நகரில் குழாய்கள் பதிய குழிகள் தோண்டப்பட்டு வருகிறது.

ஆனால், ஆமை வேகத்தில் நடந்து வரும், இப்பணி இதுவரை முழுமை பெறாமல் உள்ளது.

இதனால், நகரில் முக்கிய சாலைகளில் குழிகள் மூடப்படாமல் உள்ளதால், வாகனங்கள் நிறுத்த முடியாமல் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

எனவே, பொதுமக்கள் நலன் கருதி, இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.






      Dinamalar
      Follow us