/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வனத்துறை வாகனத்தை சேதப்படுத்திய யானை; உயிர் தப்பிய வன ஊழியர்கள்
/
வனத்துறை வாகனத்தை சேதப்படுத்திய யானை; உயிர் தப்பிய வன ஊழியர்கள்
வனத்துறை வாகனத்தை சேதப்படுத்திய யானை; உயிர் தப்பிய வன ஊழியர்கள்
வனத்துறை வாகனத்தை சேதப்படுத்திய யானை; உயிர் தப்பிய வன ஊழியர்கள்
ADDED : அக் 24, 2024 08:46 PM

கூடலுார் : கூடலுார் ஓவேலி அருகே அதிகாலையில், காட்டு யானை வனத்துறை வாகனத்தை சேதப்படுத்திய சம்பவத்தில், 5 வன ஊழியர்கள் உயிர் தப்பினர்.
கூடலுார் ஓவேலி பார்வுட் சாலை குப்பை கிடங்கு அருகே, காட்டு யானை நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு உலா வந்துள்ளது.
தகவல் அறிந்த யானை விரட்டும் வனக்குழுவினர், வாகனத்தில் அப்பகுதிக்கு சென்று, யானை விரட்ட முற்பட்டபோது, யானை விரட்டி வந்து அவர்கள் சென்ற வாகனத்தின் முன் பகுதியை சேதப்படுத்தியது.
அதிலிருந்த வனவர் மணிகண்டன், ஓட்டுனர் மஞ்சுநாத், யானை விரட்டும் குழு காவலர்கள் விஜய், மோகன், ஆல்வின் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, சுதாகரித்து கொண்ட அவர்கள் சப்தமிட்டு யானையை வனப் பகுதிக்குள் விரட்டி, உயிர் தப்பினர். இச்சம்பவத்தால், வன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வனத்துறையினர் கூறுகையில், 'பார்வுட் குப்பை கிடங்கு அருகே, அதிகாலையில் முகாமிட்டிருந்த காட்டு யானை விரட்டும்போது, அவை வாகனத்தின் முன் பகுதியை சேதப்படுத்தியது.
வண்டியில் உள்ள சைரன் ஒலி எழுப்பினால் யானை மீண்டும் வாகனத்தை தாக்கும் என்பதால், அதனை பயன்படுத்தாமல் வாகனத்தை இயக்கி வனப் பகுதிக்குள் விரட்டப்பட்டது. இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை,' என்றனர்.

