/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பள்ளியின் சத்துணவு கூடம் சேதப்படுத்திய யானை
/
பள்ளியின் சத்துணவு கூடம் சேதப்படுத்திய யானை
ADDED : அக் 04, 2024 10:13 PM

பந்தலுார் : பந்தலுார் அருகே சேரங்கோடு அரசு பள்ளி சத்துணவு கூடத்தை புல்லட் யானை சேதப்படுத்தியது.
பந்தலுார் அரகே சேரங்கோடு பகுதிக்குள் நேற்று இரவு வந்த புல்லட்யானை, சேரங்கோடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சத்துணவு கூட கதவு, ஜன்னல்களை உடைத்து சேதப்படுத்தியதுடன், அரிசி மூட்டைகளை துாக்கி செல்ல முற்பட்டது. தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் புல்லட் யானையை அடர்ந்த வனப் பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். மக்கள் கூறுகையில்,' இப்பகுதியில் மூன்றாவது முறையாக ஒரே சத்துணவு கூடத்தை புல்லட் யானை சேதப்படுத்தி வருகிறது. அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வருகிறது. எனவே, மீண்டும் இந்த யானையால் மனித உயிர்கள் பலியாகும் முன்னர் அதனை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும்,' என்றனர்.