ADDED : செப் 04, 2026 06:23 PM
அ நிறம் | அளவு
குன்னூர்:
குன்னூர் -– மேட்டுப்பாளையம் சாலையில் குட்டியுடன் உலா வரும் காட்டு யானையால் வாகனங்களை முன்னெச்சரிக்கையுடன் இயக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் –- மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில், மரப்பாலம் அருகே நேற்று காலை குட்டியுடன் காட்டு யானை உலா வந்தது. தொடர்ந்து சாலையோர வனப்பகுதியில் சென்றது.
இப்பகுதியில் காட்டு யானைகள் குட்டியுடன் உலா வருவதால் மலைபாதையில் வாகன ஓட்டிகள் மிகுந்த கவனத்துடன் இயக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
