/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்ட குளறுபடி குறித்த.. விசாரணை அவசியம்! பழங்குடி கிராமத்தில் குடிநீர் வராததால் மக்கள் அவதி
/
மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்ட குளறுபடி குறித்த.. விசாரணை அவசியம்! பழங்குடி கிராமத்தில் குடிநீர் வராததால் மக்கள் அவதி
மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்ட குளறுபடி குறித்த.. விசாரணை அவசியம்! பழங்குடி கிராமத்தில் குடிநீர் வராததால் மக்கள் அவதி
மத்திய அரசின் 'ஜல் ஜீவன்' திட்ட குளறுபடி குறித்த.. விசாரணை அவசியம்! பழங்குடி கிராமத்தில் குடிநீர் வராததால் மக்கள் அவதி
ADDED : நவ 30, 2024 04:32 AM

பந்தலுார் : 'பந்தலுார் அருகே சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட, சேரங்கோடு பழங்குடியின கிராமத்தில் 'ஜல் ஜீவன்' திட்டத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் கீழ் ஒவ்வொரு வீடுகளுக்கும், குடிநீர் இணைப்பு வழங்கி குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டும் என்பதற்காக, ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநில அரசு மூலம் மேற்கொள்ளப்படும் இந்த பணிகளில், பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக, கூடலுார் ஊராட்சி ஒன்றியத்தில் புகார் எழுந்துள்ளது.
பழங்குடி கிராமத்தில் குளறுபடி
சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட நெடுங்கோடு பழங்குடியின கிராமத்தில், குரும்பர் சமுதாயத்தைச் சேர்ந்த, 12 குடும்பத்தை சேர்ந்தவர்கள் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு,4- லட்சத்து 55- ஆயிரத்து 390 ரூபாய் செலவில், கடந்த 2022--23 ஆம் ஆண்டு, ஒப்பந்ததாரர் ஏலியஸ் என்பவர் மூலம் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அப்போது 12 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
குடிநீர் வினியோகம் செய்யும் வகையில், மோட்டார் பொருத்தவில்லை மற்றும் குடிநீர் தொட்டியும் அமைக்கவில்லை. ஆனால், திட்டம் முழுமையாக நிறைவேற்றியது போல், அதிகாரிகள் பழங்குடியின மக்களை நிறுத்தி புகைப்படம் எடுத்து சென்றவுடன் திட்டம் முடித்து வைக்கப்பட்டது. இதனால், பழமையான இடிந்த கிணற்றில், பழங்குடியின மக்கள் தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர்.
கிராமத்தை சேர்ந்த அச்சுதன் என்பவர் கூறுகையில், ''கிராமத்தில் ஒரு சில வீடுகளுக்கு இதுவரை மின் இணைப்பு வழங்கவில்லை. நடைபாதை வசதியும் இல்லாத நிலையில், ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குழாய்களை மட்டும் பொருத்தி பல லட்சம் ரூபாயை முறைகேடு செய்துள்ளனர்.
இதுவரை குடிநீர் வழங்கும் வகையில் நாங்கள் பயன்படுத்தும் பாழடைந்த கிணற்றில் மோட்டார் பொருத்தவோ, குடிநீர் தொட்டி அமைக்கவும் கிடையாது. மாவட்ட கலெக்டர் இந்த திட்டத்தில் ஏற்பட்டுள்ள முறைகேடுகள் குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.
இது குறித்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் கூறுகையில்,'' ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க மோட்டார் மற்றும் கிணறு அமைக்கப்படவில்லை. தொட்டியில் இருந்து நேரடி இணைப்பு கொடுக்க வேண்டும். நெடுங்கோடு பகுதி மற்றும் சில கிராங்களில் திட்டத்தை முழுமை படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 15வது நிதிக்குழு மானியம் மற்றும் பொது நிதியில் திட்டம் முழுமைபடுத்தப்படும்,'' என்றார்.