திறந்த நிலையில் காணப்படும் கிணறு: பாதிப்பு ஏற்படும் முன் மூடணும்
திறந்த நிலையில் காணப்படும் கிணறு: பாதிப்பு ஏற்படும் முன் மூடணும்
UPDATED : நவ 23, 2026 07:17 PM
ADDED : நவ 23, 2026 07:17 PM

அ நிறம் | அளவு
பந்தலுார்: பந்தலுார் அருகே ஏரோடு கிராமத்தில் திறந்த நிலையில் காணப்படும் கிணற்றை மூட வேண்டும்.
பந்தலுார் அருகே நெல்லியாளம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏரோடு பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. கிராமத்திற்கு மத்தியில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட, குடிநீர் கிணறு தண்ணீர் இல்லாத நிலையில் பயன்படுத்தாமல் விடப்பட்டு உள்ளது. இதன் மேல்பகுதி மூடப்படாத நிலையில், வன விலங்குகள் விழுந்து இறக்கும் அபாயம் உள்ளது. மேலும், குழந்தைகள் இப்பகுதியில் விளையாடினாலும் பாதிப்பு ஏற்படும். எனவே, பாழடைந்த கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
