ADDED : பிப் 25, 2024 11:11 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்:பந்தலுார் அருகே, பொன்னானி அரசு பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில், பழங்குடியினர் அல்லாத, மாணவர்களுக்கு சத்துணவு சமைத்து வந்த கட்டடம் இடிந்து விட்டதால், தற்போது தற்காலிகமாக சிறிய அறையில் சமையல் செய்கின்றனர்.
இதனால், குறித்த நேரத்தில் மாணவர்களுக்கு உணவு வழங்குவதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து, கூடலுார் ஊராட்சி ஒன்றியம் சார்பில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் சத்துணவு சமையல் கூடம், மாணவர்கள் கை கழுவும் இடம் ஆகியவை அமைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பணி நிறைவடைந்த நிலையில், கட்டடம் திறந்து செயல்படாமல் சிதிலமடைந்து வருகிறது.
இதனை திறக்க வலியுறுத்தி, வார்டு உறுப்பினர் சற்குணசீலன் பலமுறை மனு கொடுத்தும், தீர்வு காணப்படவில்லை.
எனவே, இந்த சமையல் கூடத்தை திறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

