/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வேணுகோபால் சுவாமி கோவிலில் ஆண்டாள் திருக்கல்யாணம்: திருவெம்பாவை பாடி பக்தர்கள் உற்சாகம்

ADDED : ஜன 14, 2024 11:32 PM

ஊட்டி;ஊட்டி புது அக்ரகாரம் வேணுகோபால் சுவாமி திருக்கோவிலில், கூடார வல்லி ஆண்டாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது.
ஆண்டுதோறும் மார்கழி மாதம், 27ம் நாள் வைணவ திருத்தலங்களில் கூடார வல்லி வைபவம் சிறப்பாக நடத்தப்படுகிறது. அதன்படி, ஊட்டி வேணுகோபால் சுவாமி கோவிலில் கூடார வல்லி ஆண்டாள் திருக்கல்யாணம் சிறப்பாக நடந்தது. இத்திருக்கல்யாண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, திரளான பக்தர்கள் சீர்வரிசை பொருட்களுடன், கோவிலுக்கு வந்தனர்.
பின்னர், திருப்பாவை திருவெம்பாவை திருப்பள்ளி எழுச்சி பாடல்கள் பாடி, திருக்கல்யாணம் நடத்தப்பட்டது. தீபாராதனை பூஜையை தொடர்ந்து, நெய் வடியும் பாலில் தயார் செய்த சக்கரை பொங்கல் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, வேணுகோபால் சுவாமி கோவில் அர்ச்சகர்கள் செய்திருந்தனர். அதேபோல், மஞ்சூர் மாரியம்மன் கோவிலில் மார்கழி வழிபாட்டை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
மஞ்சூர் அருகே சாம்ராஜ் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.