/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
/
அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம்
ADDED : மே 03, 2025 04:26 AM

ஊட்டி; ஊட்டியில் அங்கன்வாடி பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாவட்ட தலைவர் கவிதா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சசிகலா , இணை செயலாளர் விஜயா , துணைத் தலைவர் பூங்குழலி முன்னிலை வகித்தனர்.
அதில், 'மே மாதம் கோடை விடுமுறையை முழுமையாக வழங்கிட வேண்டும்; காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்; நீண்ட காலம் பணி செய்து வரும் அங்கன்வாடி பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும்,' என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. 300-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் பங்கேற்றனர்.