/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
குறை தீர்க்கும் கூட்டத்தில் குமுறிய மக்கள்
/
குறை தீர்க்கும் கூட்டத்தில் குமுறிய மக்கள்
ADDED : ஏப் 25, 2025 11:53 PM
ஊட்டி ; ஊட்டி கலெக்டர் அலுவலக குறை தீர்க்கும் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் அளித்த மனுக்கள் விபரம்:
ஊட்டி அருகே முள்ளிக் கொரை பகுதியில் நியாய விலை கடை அமைக்க அந்தோணியர் கோவில் பகுதியில் இடம் தேர்வு செய்துள்ளது. தேர்வு செய்யப்பட்ட இடத்தில் கிறிஸ்தவர்கள் ஆண்டாண்டு காலமாக மத சடங்குகள் நடத்தி வரும் பகுதி. அந்த பகுதியை தவிர்த்து வேறு பகுதியில் நியாய விலை கடை அமைக்க ஆவன செய்ய வேண்டும்.
l கேத்தி ராஜ்குமார் நகரில் 25 குடும்பங்கள் கடந்த பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். கோவில், சமுதாய கூடத்திற்கு செல்லும் நடைப்பாதையை ஒருவர் மறித்து வீடு கட்டியுள்ளார். பிரச்னை ஏற்பட்டதை அடுத்து, வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டு தீர்வு ஏற்படுத்தினர். ஆனாலும், ஊர் மக்கள் பயன்படுத்த சம்பந்தப்பட்ட நபர் ஆட்சேபம் தெரிவித்து வருகிறார். மக்கள் நடைப்பாதையை பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
l இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட புது ஹட்டி கிராமத்தில் நுாற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியிருந்து வருகின்றனர். பிரதான சாலையிலிருந்து கிராமத்திற்கு செல்லும், 2 கி.மீ.,சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இத்தலார் ஊராட்சிக்கு பல முறை புகார் தெரிவித்தும் கண்டு கொள்ளவில்லை. வாகன ஓட்டிகளும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். அத்தியாவசிய பொருட்களை கிராமத்திற்கு எடுத்து செல்ல வாடகை வாகன ஓட்டிகளை அழைத்தாலும் வர மறுகின்றனர். கிராம மக்களின் நலன் கருதி சாலையை சீரமைத்து தர தாங்கள் ஆவன செய்ய வேண்டும்.