/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
28 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி; கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை
/
28 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி; கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை
28 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி; கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை
28 ஆயிரம் மாடுகளுக்கு கோமாரி தடுப்பூசி; கால்நடை பராமரிப்புத்துறை நடவடிக்கை
ADDED : டிச 17, 2024 09:29 PM
ஊட்டி; நீலகிரியில், 28 ஆயிரம் மாடுகளுக்கு கால்நடை பராமரிப்புத்துறை மூலம் கோமாரி தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.
ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அப்புக்கோடு பகுதியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ், கால்நடைகளுக்கு, 6ம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணிகள் நடந்தது.
கலெக்டர் லட்சுமி பவ்யா பங்கேற்று கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணியை துவக்கி வைத்து பேசியதாவது:
நீலகிரியில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு, 6ம் சுற்று கோமாரி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி வைக்கப்பட்டது.
இம் மாவட்டத்தில், 28 ஆயிரம் மாட்டினங்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பாக, கோமாரி நோயினால் மாடுகளில் சினை பிடிக்காமல் போவது, பால் உற்பத்தி குறைதல், தோல் பொருட்களின் பாதிப்பு இறக்கம், எருதுகளின் வேலை திறன் பாதிப்பு மற்றும் கன்றுகளின் அதிக இறப்பு ஆகியவை ஏற்பட்டு கால்நடை வளர்ப்புவருக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
31 குழுக்கள் அமைப்பு
இந்த கொடிய நோயை தடுக்கும் பொருட்டு நீலகிரியில் ஜன., 5ம் தேதி வரை, 4 மாத வயதிற்கு மேற்பட்ட பசுவினம் மற்றும் எருமை இனங்களுக்கு, 31 குழுக்கள் அமைத்து அதன் மூலம் தடுப்பூசி போடும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த தடுப்பூசி போடும் பணிகளானது கால்நடை மருந்தகம் மற்றும் கால்நடை மருத்துவமனைக்கு உட்பட்ட பகுதிகளில், 21 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறுகிறது. எனவே , கால்நடை வளர்ப்போர் தங்களது கால்நடைகளுக்கு தவறாமல் தடுப்பூசி போட்டுக்கொண்டு. பயன்பெற வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் சத்திய நாராயணன், துணை இயக்குனர் திருமூலன், உதவி இயக்குனர்கள் நீல வண்ணன், சாரதா பாபி, கால்நடை உதவி மருத்துவர்கள் ராகவேந்திரன், சீனிவாசன், பயாஸ் பாட்ஷா உட்பட பலர் பங்கேற்றனர்.