ADDED : செப் 29, 2025 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: ஆண்டுதோறும் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு, அரசு சார்பில் சைக்கிள் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டு சைக்கிள் போட்டி ஊட்டியில் உள்ள படகு இல்லம் செல்லும் சாலையில் தண்டர் வோர்ல்ட் பகுதியில் இருந்து துவங்கி சேரிங்கிராஸ் வரை நடந்தது. போட்டியை கலெக்டர் லட்சுமிபவ்யா துவக்கி வைத்தார். போட்டிகளில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் சான்றிதழ், பரிசு வழங்கப்பட உள்ளன. எஸ்.பி.நிஷா, மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா, ஊட்டி நகராட்சி கமிஷனர் கணேசன் உட்பட பலர் பங்கேற்றனர்.