ADDED : டிச 09, 2024 09:35 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கூடலுார்; கூடலுாரில் ஊழல் எதிர்ப்பு தின ஊர்வலத்தில் கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
கூடலுார் அரசு கலை, அறிவியல் கல்லுாரி மற்றும் 'சில்ட்ரன்' அறக்கட்டளை சார்பில், ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. நகராட்சி அலுவலகம் அருகே, துவங்கிய ஊர்வலத்துக்கு, இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது தலைமை வகித்தார்.
டி.எஸ்.பி.,வசந்தகுமார் துவக்கி வைத்தார். ஊர்வலம், ஊட்டி -மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவடைந்தது. அனைவரும் ஊழலுக்கு எதிராக உறுதிமொழி எடுத்து கொண்டனர். கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.