/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை
/
கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை
கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை
கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் சோதனை
ADDED : அக் 24, 2024 08:42 PM
கோத்தகிரி: கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் நேற்று முன்தினம் இரவு, திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
கோத்தகிரி பகுதியில் விளை நிலங்கள் அதிகம் விற்கப்பட்டு, காட்டேஜ், ரிச்சார்ட் உட்பட, கட்டுமான பணிகள் அதிகளவில் நடந்து வருகிறது. ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் நிலத்தின் ஆவணங்களுக்காக, தாசில்தார் அலுவலகம் செல்வது வழக்கம்.
நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல் மற்றும் அனுபோக சான்று உள்ளிட்ட சான்றுகளை பெறுவதற்கு, புரோக்கர்கள் மூலம் சில அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பதாக புகார் உள்ளது. இப்பணி அலுவலக நேரம் முடிந்த பிறகு, இரவு நேரத்தில் தான் நடப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்ற தகவலின் அடிப்படையில், இன்ஸ்பெக்டர் பரிமளா தேவி தலைமையில், அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அலுவலக கதவுகளை மூடிய அதிகாரிகள் தாசில்தார் உட்பட, வி.ஏ.ஓ.,கள், அலுவலக ஊழியர்களிடம், தனித்தனியாக விசாரணை நடத்தி, சோதனையில் ஈடுபட்டனர்.
ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, கணக்கில் வராத பணத்தை கைப்பற்றிய அதிகாரிகள், 'ஆன் லைன்' மூலம் நடந்த பண பரிவர்த்தனை குறித்தும் விசாரித்து வருகின்றனர்.