/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மசினகுடியில் வேட்டை தடுப்பு காவலர் தற்கொலை
/
மசினகுடியில் வேட்டை தடுப்பு காவலர் தற்கொலை
ADDED : ஜூலை 17, 2025 09:19 PM
கூடலுார்; முதுமலை, தெப்பக்காடு யானைபாடியை சேர்ந்தவர் சிவகுமார், 24. இவர், மசினகுடி கோட்டம், மசினகுடி வனச்சரகத்தில் வேட்டை தடுப்பு காவலராக பணியாற்றி வந்தார்.
இங்குள்ள கூட்டுறவு வேட்டை தடுப்பு முகாமில், நேற்று முன்தினம், இவர் உட்பட, 4 வன ஊழியர்கள் தங்கி பணியாற்றினார். பணிகள் முடிந்து, மாலை இவர்கள் வேட்டை தடுப்பு முகாமுக்கு வந்து தங்கினார். தரை தளத்தில் உள்ள தகர செட்டில் இருந்த சிவக்குமார் நீண்ட நேரம் வெளியே வரவில்லை.
சக வன ஊழியர்கள், அங்கு சென்று பார்த்த போது, சிவக்குமார் தகர செட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்திருப்பது தெரிய வந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
மசினகுடி எஸ்.ஐ., குணசேகர் மற்றும் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, கூடலுார் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில், குடும்ப பிரச்னையில், தற்கொலை செய்தது தெரிய வந்தது.