தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தாயகம் திரும்பியோருக்கான நலத்திட்டங்களுக்கு விண்ணப்பம்

தாயகம் திரும்பியோருக்கான நலத்திட்டங்களுக்கு விண்ணப்பம்

தாயகம் திரும்பியோருக்கான நலத்திட்டங்களுக்கு விண்ணப்பம்


ADDED : ஆக 25, 2026 06:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2026 06:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குன்னுார்: நீலகிரி மாவட்டத்தில் தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை சார்பில், ‘ரெப்கோ’ வங்கி தலைவர் சந்தானம், ரெப்கோ ஹோம் பைனான்ஸ் தலைவர் வக்கீல் தங்கராஜ் மேற்பார்வையில், தாயகம் திரும்பிய பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கான சிறப்பு நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, குன்னுார் ரெப்கோ வங்கி மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், ரெப்கோ வங்கி பேரவை பிரதிநிதி ரமேஷ் குமார், முன்னாள் பிரதிநிதிகள் சந்திர மோகன், அண்ணாதுரை, தாயகம் திரும்பியோர் நல அறக்கட்டளை அங்கத்தினர்கள் நல்லேந்திரன், பரமேஸ்வரன், ராஜேந்திரன், குமாரி மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

அறக்கட்டளை நிர்வாகி ஒளியழகன் கூறுகையில்,‘‘ சிறப்பு நல திட்டத்தின் கீழ், குன்னுாரில், 600 மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விரைவில் நல உதவிகள் வழங்கப்பட உள்ளது,’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us